சர்வதேச அலைசறுக்கு போட்டி - கால் இறுதிச் சுற்று நிறைவு...
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலைசறுக்கு போட்டியின் காலிறுதி சுற்று நிறைவு பெற்றது. மாமல்லபுரத்தில், கடந்த 14ஆம் தேதி முதல் சர்வதேச அலைசறுக்கு போட்டி நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி சுற்றில் ஆடவர் பிரிவில், ஜப்பானின் ரைஹா ஓனோவ், டென்சி இவாமி, ஸ்வீடனின் கியம் மார்ட்டின், இந்தோனேசியாவின் கேடட் ஆகஷ் ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இதேபோல், மகளிருக்கான காலிறுதி சுற்றில், ஜப்பானின் கனா நகாஷியோ, ஷினோ மட்சுடா உள்ளிட்டோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
Next Story