உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.. இந்திய அணிக்கு ஷாக் கொடுத்த கத்தார்
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில், இந்திய அணியை கத்தார் அணி வீழ்த்தியது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற போட்டியில், குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதின. சிறப்பாக விளையாடிய கத்தார் அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 6 புள்ளிகளுடன் கத்தார் அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது. 3 புள்ளிகளுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
Next Story