உலகக்கோப்பை கிரிக்கெட்..இன்று நடக்கும் வாழ்வா சாவா போட்டி..! ட்விஸ்ட்க்காக காத்திருக்கும் ரசிகர்கள்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நெதர்லாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன.

தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்த இலங்கை இன்று வெற்றி பெறும் கட்டாயத்தில் உள்ளது. அதே நேரத்தில், கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய உற்சாகத்துடன் நெதர்லாந்து களமிறங்குகிறது.

மதியம் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. காயத்தில் இருந்து குணமடைந்துள்ள இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இன்று களமிறங்குகிறார்.

ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்தும், நெதர்லாந்திடம் தென் ஆப்பிரிக்காவும் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்