மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்... உ.பி. அணியை வீழ்த்திய குஜராத்

x

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பெத் மூனி பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பெத் மூனி 74 ரன்களும் லாரா வோல்வார்ட் 43 ரன்களும் எடுத்தனர். பின்னர் 153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய உத்தரப் பிரதேசம் 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா - பூனம் நிலைத்து நின்று ஆடினர். தீப்தி சர்மா அரைசதம் அடித்தார். கடைசி வரை இருவரும் வெற்றிக்காக போராடிய நிலையில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே உத்தரப் பிரதேசம் எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. 88 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடிய தீப்தி சர்மாவின் ஆட்டம் வீண் ஆனது


Next Story

மேலும் செய்திகள்