நியூசி. மகளிர் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

x

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 227 ரன்கள் எடுத்தது. தேஜஸ் ஹஸாப்னிஸ் 42 ரன்களும் தீப்தி சர்மா 41 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி 168 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய ஸ்பின்னர் ராதா யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1க்கு பூஜ்யம் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்