பைனல் விஷப்பரீட்சை - இந்தியாவுடன் மோதப்போவது யார் ?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பம் ஆகவுள்ளது. லீக் சுற்றின் முடிவில் 14 புள்ளிகளைப் பெற்ற இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன. நாக்-அவுட் போட்டியில் பெரிதாக இதுவரை சோபிக்காத தென் ஆப்பிரிக்கா, இன்றையப் போட்டியில் தங்களின் மோசமான வரலாற்றை மாற்ற கடுமையாக முயற்சிக்கக் கூடும். பேட்டிங்கில் டிகாக், மார்க்ரம், கிளாசன், மில்லர் என அட்டகாசமான லைன்-அப்பை தென் ஆப்பிரிக்கா கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் வார்னர், ஹெட், மார்ஷ், மேக்ஸ்வெல் என அதிரடி காட்டும் வீரர்கள் வரிசைக் கட்டி நிற்கும் நிலையில் ஈடன் கார்டனில் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.