`வாபஸ்' - இந்தியாவுக்கு கிரீன் சிக்னல்.. உடனடியாக நடைமுறைக்கு வரும்

x

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு திரும்பப் பெற்றது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல், நடத்தப்படாமல் இருந்த‌தால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 9ஆம் தேதி, சஸ்பெண்ட் நடவடிக்கையை நீக்குவது குறித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு ஆலோசித்த‌து. அப்போது, அனைத்து வீர‌ர்களும் பாகுபாடு இல்லாமல், போட்டிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை உலக மல்யுத்த கூட்டமைப்பு திரும்ப‌ப் பெற்றுள்ளது. உடனடியாக இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்