வினேஷ் போகத் மேல்முறையீடு - இன்று தீர்ப்பு
வினேஷ் போகத் மேல்முறையீடு - இன்று தீர்ப்பு
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட இந்தியாவின் வினேஷ் போகத், இறுதிப் போட்டி வரை முன்னேறிய நிலையில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதக்க வாய்ப்பை இழந்தார். இதனை எதிர்த்தும், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரியும், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், வினேஷ் போகத் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று இரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story