பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போஹத் தகுதி நீக்கம்...எடை பரிசோதனை - சொல்வது என்ன?

x

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்?... மல்யுத்த எடை பரிசோதனையின் நடைமுறைகள் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

மல்யுத்த போட்டியில் முதல் நாள் காலை மருத்துவ பரிசோதனை மற்றும் எடை பரிசோதனை, 2வது நாள் காலை எடை பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.

மருத்துவ பரிசோதனையில் வீரருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது. போட்டியில் பங்கேற்கும் வீரர் நீண்ட நகத்தை வைத்திருக்கக் கூடாது.

எடை பரிசோதனையின்போது singlet வகை இறுக்கமான ஆடையைத் தான் வீரர்கள் அணிந்திருக்க வேண்டும்...

ஒரு வீரர் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டால் 50 கிலோ எடைக்குள் அவர் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

இத்தகைய சூழலில், வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொள்ளும் வினேஷ் போஹத், இம்முறை 53 கிலோ எடைப்பிரிவிற்கு மற்றொரு வீராங்கனையான அன்டிம் பங்கல் தகுதி பெற்றதால் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதிப் போட்டி நடைபெற்ற முதல் நாளில் 49 கிலோ 900 கிராம் என்ற அளவில் வினேஷ் போஹத்தின் எடை இருந்துள்ளது. அதனால் அந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள வினேஷ் போஹத் அனுமதிக்கப்பட்டார்.

இறுதிப்போட்டிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வினேஷ் போஹத்தின் எடை 50 கிலோ 100 கிராம் என்ற அளவில் இருந்துள்ளது.

சுமார் 100 கிராம் அளவு கூடுதல் எடை இருந்ததால் வினேஷ் போஹத் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்