வினேஷ் போஹத் தகுதி நீக்கம் - நடந்தது என்ன?

x

நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்

வினேஷ் போஹத் பொதுவாக 53 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்பவர்

இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார்

மல்யுத்த போட்டியின் முதல் நாள் காலையில் மருத்துவ பரிசோதனை மற்றும் எடை பரிசோதனை நடத்தப்படும்

2வது நாள் காலையில் எடை பரிசோதனை நடத்தப்படும்

எடை பரிசோதனையின் போது singlet வகை இறுக்கமான ஆடையை தான் அணிந்திருக்க வேண்டும்

நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்

மருத்துவ பரிசோதனையில் நோய் தொற்று கண்டறியப்பட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது

நகம் உள்ளிட்டவை நீளமாக வைத்திருக்க கூடாது

அரையிறுதி போட்டி முடிந்த பிறகு வினேஷ் போஹத் 1 கிலோ வரை அதிகமாக இருந்ததாக தெரிகிறது

எடையைக் குறைக்க உறங்காமல் இரவு முழுவதும் வினேஷ் போஹத் ஸ்கிப்பிங் உள்ளிட்ட work out மேற்கொண்டு உள்ளார்

உணவையும் தவிர்த்துள்ளார்

ஆனால் எடை பரிசோதனையில் வினேஷ் போஹத் 100 கிராம் அளவு அதிக எடை இருந்து இருக்கிறார்

இந்திய ஒலிம்பிக் கமிட்டி விநேஸின் எடையைக் குறைக்க அவகாசம் கேட்டதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது

எடையை குறைப்பதற்கு வினேஷ் போஹத் தலை முடி வெட்டப்பட்டதாகவும், உடலில் இருந்து ரத்தம் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது

பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் வினேஷ் போஹத் எடையை 50 கிலோவாக குறைக்க முடியாமல் போயுள்ளது


Next Story

மேலும் செய்திகள்