உகாண்டாவை ஊதித்தள்ளிய நியூசிலாந்து

x

டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் உகாண்டாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது.

டிரினிடாடில் குரூப் சி பிரிவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. தொடந்து ஆடிய உகாண்டா அணி வழக்கம்போல் தடுமாறி விக்கெட்டுகளை இழந்தது. பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 40 ரன்களுக்கு உகாண்டா ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டுகளையும் போல்ட், சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 41 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து, 6வது ஓவரில் 1 விக்கெட் இழந்த நிலையில் இலக்கை எட்டியது. இதன்மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்துக்கு இது ஆறுதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்