மெடல்களை குவித்த இரட்டையர்கள் - சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் அசத்தல்
அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்காக சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதித்த கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களின் பயிற்சிக்கு, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்காக சிறப்பு ஒலிம்பிக் போட்டி, ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது. இதில், கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளத்திலுள்ள மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளியில் பயின்று வரும், இரட்டையர்களான லிபின் மற்றும் விபின் பங்கேற்றனர். விபின் சிறப்பு ஒலிம்பிக் தடகளத்தில், 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட 3 போட்டிகளில், 4வது இடத்தை பிடித்தார். அதேபோல் 200 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட 3 போட்டிகளில் பங்கேற்ற லிபின், ஒரு போட்டியில் 3 வது இடம் பிடித்தார். சர்வதேச அளவில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இருவருக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும், இருவரும் பயிற்சி பெற மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டுமெனவும், அவர்களது ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.