ஊருக்குள் நடந்த திருட்டு.. ஊரேயே நிக்க வச்ச போலீஸ்... கடைசியில் நடந்த

x

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே, வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவத்தில், ஊர் மக்களின் கைரேகையை கொண்டு திருடிய நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.

வலங்கைமான் அருகே வாடாமங்கலத்தை சேர்ந்த சத்யா என்பவர், தனது தாயாருடன் கோவை சென்றார். 2 நாட்களுக்குப்பின் திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகைகள் காணாமல்போனது குறித்து அதிர்ச்சியடைந்தார். பீரோவை உடைக்க பயன்படுத்திய கம்பி வீட்டிற்குள்ளே கிடந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். ஊரில் உள்ள 40 குடும்பங்களை சேர்ந்த 60 பேரிடம் கைரேகை மாதிரி எடுக்கப்பட்டது. இதில், வலங்கைமான் கீழத் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் கலைமணியின் கைரேகை ஒத்துப்போனது. இதையடுத்து கலைமணியை கைது செய்த போலீசார், அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு சத்யாவிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்