கடைசியில் காத்திருந்த பெரிய ட்விஸ்ட்... இலங்கையை விரட்டியடித்த வங்கதேசம்

x

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 38வது லீக் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம், பவுலிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் குசல் பெரேரா, மீண்டும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் குசல் மெண்டிஸ் 19 ரன்களுக்கு வெளியேற, நிஷாங்காவும் சமர விக்ரமாவும் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மூத்த வீரர் மேத்யூஸ் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் டைம்டு-அவுட் முறையில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி தடுமாறியது. எனினும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசலன்கா, சதம் விளாசி அசத்தினார். கடைசி ஓவரில் 279 ரன்களுக்கு இலங்கை ஆல்-அவுட் ஆனது.

280 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணியில், தொடக்க வீரர் தான்ஷித் 9 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 23 ரன்களுக்கும் வெளியேறினர். 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷகிப் அல் ஹசன் - நஜ்முல் ஷான்டோ ஜோடி நிலைத்து நின்று ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்தனர். 90 ரன்களுக்கு ஷான்டோவும், 82 ரன்களுக்கு ஷகிப் அல் ஹசனும் மேத்யூஸிடம் ஆட்டமிழந்தனர். மகமதுல்லா, முஷ்பிகுர், தவ்ஹித் ஆகியோரின் பங்களிப்பால் 42வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்த வங்கதேசம், 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நடப்பு தொடரில் 6வது தோல்வி அடைந்த இலங்கை தொடரில் இருந்து வெளியேறியது.


Next Story

மேலும் செய்திகள்