`T20 உலகக்கோப்பை' - வங்கதேசத்தை வெளுத்தெடுத்த இந்திய அணி
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 196 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 50 ரன்களும், விராட் கோலி 37 ரன்களும், ரிஷப் பன்ட் 36 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
Next Story