இந்தியா - நியூசி.டெஸ்ட் தொடர்..ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்..| India | Test Cricket

x

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் லேதம் தலைமையிலான அணியில் பிளண்டல், பிரேஸ்வெல், டிவோன் கான்வே, மாட் ஹென்ரி, டேரல் மிட்சல், வில் ஹோரூர்க், அஜாஸ் பட்டேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும் கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, சான்ட்னர், பென் சியர்ஸ், சோதி, சவுத்தி, வில் யங் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக, கேன் வில்லியம்சன் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மாற்று வீரராக மாக் சாப்மேன் சேர்க்கப்படுவதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்