அடுத்தடுத்து அசத்தும் தமிழக வீரர்கள்.. தங்கம், வெள்ளி பதக்கங்களை தட்டி தூக்கிய இந்தியா
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் ராஜேஷ் ரமேஷ், முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இதேபோல், மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தி உள்ளது. நடப்பு தொடரில் தமிழக வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story