9.4 ஓவரிலே அடித்து துவைத்து செமி பைனலுக்குள் இங்கிலாந்து மாஸ் என்ட்ரி

x

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் அமெரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது..இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, அமெரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அண்டிரிஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில், முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க, முடிவில் 115 ரன்களுக்கு அமெரிக்க அணி ஆல் அவுட் ஆனது.இதில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜார்டன், ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் முதன்முதலாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.இதைத் தொடர்ந்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.இங்கிலாந்து சார்பில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிலிப் சால்ட் தனது பங்குக்கு 25 ரன்கள் சேர்த்தார்.முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 9 புள்ளி 4 ஓவர்களில் 117 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்