MI-க்கு குட்பை.. KKR-க்கு ஹாய் சொல்லும் சூர்யகுமார் யாதவ்? | Mumbai Indians | suryakumar yadav
இந்திய அணியின் டி20 கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் யாதவுக்கு, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இணைய அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா உள்ள நிலையில், அங்கு சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன் பொறுப்பு கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டனாக பொறுப்பேற்க, அந்த அணியின் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரை, சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story