முதல் பந்திலேயே கோல்டு சிக்ஸர் - ஆசிய போட்டியில் அசத்திய தமிழகத்தை சேர்ந்த வீரர்

x

ஆசிய ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியில் தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்று நாடு திரும்பிய இந்திய வீரர் அபய் சிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் வசிக்கும் சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் பட்டாசுகள் வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். முதன் முறையாக விளையாடிய ஆசிய போட்டியில் தங்கம் வென்றது தனி சிறப்பை தந்துள்ளது எனவும் எனது அடுத்த இலக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டிதான் என பதக்கம் வென்ற அபய் சிங் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்