ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று.. கால்இறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும், ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார். மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் அனாமரிஜா மிலிசிக்கை ஜாஸ்மின் எதிர்கொண்டார். இதில் 5 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஜாஸ்மின் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார். அடுத்த காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை ஜாஸ்மின் உறுதிசெய்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story