யூரோ கோப்பை கால்பந்து தொடர் - முக்கிய நேரத்தில் அசத்திய 16 வயது வீரர்

x

யூரோ கோப்பை கால்பந்து தொடர் - முக்கிய நேரத்தில் அசத்திய 16 வயது வீரர்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஸ்பெயின் முன்னேறியது. ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சம பலம் வாய்ந்த ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முயானி, கோல் அடித்து பிரான்ஸை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் 16 வயதே நிரம்பிய ஸ்பெயின் வீரர் லாமின் யமால் பதில் கோல் போட்டு அதகளப்படுத்தினார். தொடர்ந்து 25வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஓல்மோ கோல் போட, பெரும் ஆரவாரம் எழுப்பி மைதானத்தை ஸ்பெயின் ரசிகர்கள் அதிரச் செய்தனர். முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னிலை பெற்ற நிலையில் 2வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸின் கோல் முயற்சிகளை ஸ்பெயின் வீரர்கள் முறியடித்தனர். கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்