5 ஆயிரம் அமெரிக்க டாலரை அள்ளிக்கொடுத்த சிராஜ் | Siraj | Asia Cup

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், ஆட்டநாயகன் விருதுக்கான பரிசு தொகையை கொழும்பு பிரேமதாசா மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கினார். ஆட்டநாயகன் விருது வென்ற சிராஜ்க்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது. இதனை, கடுமையான மழையின்போதும் மைதானத்தை பராமரித்து, சிறப்பாக ஆடுகளத்தை தயார் செய்த ஊழியர்களுக்கு வழங்குவதாக சிராஜ் அறிவித்தார். சிராஜின் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்