கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் | Shubman Gill | Dengue fever

x

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தொடக்க வீரர் சுப்மன் கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில், வருகிற 11ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இந்திய அணியுடன் கில் டெல்லி செல்லவில்லை என்றும், சென்னையில் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்