டி20 வேர்ல்டுகப்.. இந்தியா அபார வெற்றி
நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தீர்மானித்த நிலையில், முதலில் பேட் செய்த அயர்லாந்து 96 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி, 12 புள்ளி 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 52 ரன்களும், ரிஷப் பண்ட் 36 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2 புள்ளிகளை பெற்று குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
Next Story