கடைசி நேரத்தில் RCB-க்கு வந்த சிக்கல்... பலிக்குமா பிளே ஆப் கனவு

x

ஐபிஎல் கிரிக்கெட்டின் 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில், பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலோ, மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். அதே சமயம் பெங்களூரு, 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவருக்குள் சேசிங் செய்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்