இயல்பு நிலைக்கு திரும்பியது RCB.. ஏர்போர்ட்டில் காத்திருக்கும் CSK
ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்த பெங்களூரு அணி, தொடரிலிருந்து வெளியேறியது.... அகமதாபாத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த ராஜஸ்தான் 19 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ரியான் பராக் 36 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது..நாளை சென்னையில் நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஐதராபாத்துடன் ராஜஸ்தான் அணி மோதுகிறது.