வேங்கை வேகத்தில் விளையாடிய பி.வி.சிந்து.. இந்தியாவிற்கு ஷாக் கொடுத்த முக்கிய வீரர் | PV Sindhu

x

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவும் மோதினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீ, 21க்கு 19, 21க்கு 14 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த சிந்து, பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாத்விக்-சிராக் ஜோடி வெளியேறிய நிலையில், தற்போது முன்னணி வீராங்கனை சிந்துவும் தோல்வி அடைந்து வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்