P.T. உஷா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

x

பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா தனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை என காங்கிரஸில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டியில் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டு வினேஷ் போகத் பதக்க வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து ஓய்வை அறிவித்த அவர், தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டி இடுகிறார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா மீது வினேஷ் போகத் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தான் மருத்துவமனையில் இருந்தபோது தனக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பி.டி உஷா பகிர்ந்ததாகவும்,

ஆதரவாக இருப்பதாக காட்டும் வகையில் அங்கேயும் அரசியல்தான் நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார். தகுதி நீக்கத்தை எதிர்த்து அரசு முதலில் மேல்முறையீடு செய்யவில்லை...தான் மேல்முறையீடு செய்தபிறகு அதில் இணைந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்