உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரதமர் மோடி..? | PM Modi | ICC Worldcup | India

x

வருகிற 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், இறுதிப்போட்டியைக் காண பிரதமர் மோடி வரவுள்ளதாக தெரிகிறது. மேலும், இறுதிப்போட்டிக்கு முன்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்