பாராலிம்பிக் - அரையிறுதியில் தமிழக வீராங்கனை மனீஷா

x

பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதிச் சுற்றுக்கு தமிழக வீராங்கனை மனீஷா ராமதாஸ் முன்னேறி உள்ளார். எஸ்.யூ-5 பிரிவு பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை டொயோடாவை மனீஷா ராமதாஸ் எதிர்கொண்டார். இதில் 21க்கு 13, 21க்கு 16 என்ற செட் கணக்கில் மனீஷா ராமதாஸ் வெற்றி பெற்றார். நள்ளிரவு 2 மணியளவில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் சக தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுடன் மனீஷா மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்