பாராலிம்பிக் பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் சஸ்பெண்ட்

x

டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், 18 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஊக்கமருந்து விதிகளை மீறிய புகாரில் பிரமோத் பகத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 12 மாதங்களில் மூன்று முறை ஊக்கமருந்து சோதனைகளில் சிக்கியுள்ளதால், பிரமோத் பகத்தை 18 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து, உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதனால் 2024-ஆம் ஆண்டிற்கான பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பிரமோத் பகத் இழந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்