வெற்றி முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்.. ஷாக் கொடுக்குமா ஆப்கானிஸ்தான்..?

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தானுக்கு இன்றையப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ரஷீத் கான், முஜீப் உள்ளிட்ட தரம் வாய்ந்த ஸ்பின்னர்களைக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு கடும் சவால் அளிக்க வாய்ப்பு உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே ரைவல்ரி (RIVALRY) இருப்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்