கத்துக்குட்டி கனடாவை அலறவிட்ட பாகிஸ்தான்

x

நியூயார்க்கில் உள்ள நசாவு மைதானத்தில் நடந்த போட்டியில், பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின. டாஸ் வென்று பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை கனடா அணி குவித்தது. 107 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 17 புள்ளி 3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. 53 பந்துகளில் 53 ரன்கள் குவித்து முகமது ரிஸ்வான் பாகிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டார். குரூப் ஏ பிரிவில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணிக்கு, இது முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்