முதல் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி/

x

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 823 ரன்கள் குவித்து பதிலடி தந்தது. 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்