ஒலிம்பிக் போட்டியில் அசத்தும் `இணைந்த கைகள்' காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் | Olympic
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை சாதனை படைத்துள்ளது. குரூப் சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணை ஆடவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. சி பிரிவில் ஜெர்மனியின் மார்க் லாம்ஸஸ், மார்வின் செய்டல் இணையுடன் இந்திய இணை மோத இருந்தது. எனினும், காயம் காரணமாக இந்த இணை போட்டியில் பங்கேற்காமல் விலகிய நிலையில், சாத்விக்-சிராக் இணை காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய இணை என்ற பெருமையையும் சாத்விக்-சிராக் இணை பெற்றுள்ளது.
Next Story