பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ்.. வெண்கலம் வென்றார் இஹா ஸ்வியாடெக்..!

x

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் போட்டியில் போலந்தைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி கண்டார். மகளிர் ஒற்றையர்ப் பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கானப் போட்டியில் ஸ்லோவேக்கிய வீராங்கனை அன்னா கரோலினாவை 6க்கு 2, 6க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி இஹா ஸ்வியாடெக் வெண்கலப் பதக்கம் வென்றார்.


பாரிஸ் ஒலிம்பிக் ஜூடோ போட்டியில் பிரான்ஸ் வீரர் டெடி ரினர் தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார். ஆடவர் 100 கிலோவிற்கு அதிகமான எடைப்பிரிவில் நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கானப் போட்டியில் பிரான்ஸ் வீரர் கிம் மின் ஜாங் உடன் மோதினார். இதில் 10க்கு பூஜ்யம் என்ற கணக்கில் டெடி ரினர் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் தனது 4வது தங்கப் பதக்கத்தை டெடி ரினர் வென்றார். மகளிர் 78 கிலோவிற்கு அதிகமான எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்தி பிரேசில் வீராங்கனை சவ்சா தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்