ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்க பதக்கம்.. சாதனை படைத்த ஜோகோவிச்!

x
  • பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.
  • ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கானப் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும், ஸ்பெயினைச் சேர்ந்த இளம் வீரர் அல்கராஸும் மோதினர்.
  • போட்டி ஆரம்பித்தது முதல் இரு வீரர்களும் பரஸ்பரம் கடுமையாக சவால் அளித்து புள்ளிகளைப் பெற்றனர்.
  • சுமார் 45 நிமிடம் நடைபெற்ற முதல் செட்டை,, டை-பிரேக்கரில் 7க்கு 6 என்ற கணக்கில் ஜோகோவிச் வென்றார்.
  • 2வது செட்டிலும் இரு வீரர்களும் தீவிரமாகப் போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
  • பரபரப்பாக நடைபெற்ற 2வது செட்டை 7க்கு 6 என்ற கணக்கில் டை-பிரேக்கரில் கைப்பற்றிய ஜோகோவிச், நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
  • மேலும் ஒலிம்பிக் டென்னிஸ் தனிநபர் பிரிவில் அதிக வயதில் தங்கம் வென்ற வீரர் என 37 வயதாகும் ஜோகோவிச் சாதனை படைத்தார்.
  • ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் இறுதிப்போட்டி முடிந்த பிறகு வெற்றிக் களிப்பில் ஜோகோவிச்சும், தோல்வி அடைந்த வேதனையில் அல்கராஸும் கண்ணீர் சிந்தினர்....

Next Story

மேலும் செய்திகள்