மீண்டும் தங்கம் வெல்லும் முனைப்பில் நீரஜ் சோப்ரா

x

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இன்று பங்கேற்க உள்ளார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டியெறிதல் தகுதிச் சுற்றில் 89 புள்ளி 34 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து முதலிடம் பிடித்தார். இன்று இரவு 11.55 மணியளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக மாலை 5.30 மணிக்கு ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஸ்பெயினுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்