ஆசிட்டை குடித்த மயங்க் அகர்வால்.. உயிருக்கே வந்த பெரும் சோதனை - அதிர்ந்த ரசிகர்கள்
விமான பயணத்தின்போது ஏற்பட்ட திடீர் உடலநலக் குறைவு காரணமாக, இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் மயங்க் அகர்வால் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை குடித்தது தெரியவரவே, தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை, மயங்க் அகர்வால் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தற்போது நலமாக உள்ளதாகவும், மீண்டு வர தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
Next Story