தங்கத்தை தட்டிய தமிழக வைரங்கள் - மிரண்டு போன மலேசியா

x

தங்கத்தை தட்டிய தமிழக வைரங்கள் - மிரண்டு போன மலேசியா

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்தியா, மலேசியா, கத்தார், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டனர். இதில் மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த மாணவர் உதயா ஒற்றை அலங்கார பிரிவில் தங்கபதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதேபோல், காங்கேயத்தை சேர்ந்த குகன் என்ற மாணவர் நெடுங்கம்பு பிரிவில் தங்கமும் அலங்கார வீச்சு பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளார். தருண்குமார், மோதிகா, வைஷ்ணவி உள்ளிட்டோரும் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்