ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக நேற்று நடந்த அதிசயம் | IPL 2024
ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் குஜராத்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வென்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.மெதுவான ஆடுகளத்தில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 58 ரன்களும் கேப்டன் கே.எல்.ராகுல் 33 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 164 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, லக்னோவின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லக்னோ பவுலர்கள் யாஷ் தாகூர், க்ருணல் பாண்டியா, ரவி பிஷ்னோய் ஆடுகளத்தின் தன்மையை முழுமையாக பயன்படுத்தி நெருக்கடி அளித்தனர். இதனால் 18 புள்ளி 5 ஓவர்களில் 130 ரன்களுக்கு குஜராத் ஆல்-அவுட் ஆனது. 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய லக்னோ, ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக குஜராத்துக்கு எதிராக வெற்றியை பதிவு செய்துள்ளது. லக்னோ பவுலர் யாஷ் தாகூர் 5 விக்கெட்டுகளையும் க்ருணல் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.