காதலை வெளிப்படுத்தும் களமாக மாறிய ஆடுகளம்..
பதக்கத்தை கடிக்க வேண்டுமா என சீன வீராங்கனை கொடுத்த க்யூட் ரியாக்ஷன்.... உலக சாதனை படைத்த பின் காதலிக்கு முத்தமிட்ட ஸ்வீடன் வீரர்.... காதலை வெளிப்படுத்தும் களமாக மாறிய ஆடுகளம் என பாரிஸ் ஒலிம்பிக்கில் அன்பு ததும்பி வழிந்த தருணங்களை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் கோலூன்றி தாண்டும் போட்டியில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றார் ஸ்வீடன் வீரர் டூப்ளன்டிஸ்... வெற்றி பெற்ற அடுத்த கணம், தனது காதலியை நோக்கி ஆரவாரத்துடன் ஓடி அவர் முத்தமிட்டது, ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் கவர்ந்தது.
பாரிஸ் நகரின் காற்றிலும் காதல் விரவிக் கிடக்கும் என்பார்கள்... அப்படிப்பட்ட பாரிஸின் ஒலிம்பிக் ஆடுகளத்தை விளையாட மட்டும் வீரர்கள் பயன்படுத்தவில்லை.... தங்கள் காதலை வெளிப்படுத்தும் களமாகவும் பயன்படுத்திக் கொண்டனர்.
Next Story