IPL போல் இது GCPL - கோப்பை, லோகோ, ஜெர்சி வெளியீடு

x

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஐபிஎல் தொடரை போல

நடத்தப்படவுள்ள குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடருக்கான கோப்பை, அணிகளின் லோகோ மற்றும் ஜெர்சி வெளியீட்டு விழா நடைபெற்றது.

குடியாத்தத்தில் வரும் 19ம் தேதி தொடங்க உள்ள குடியாத்தம் பிரீமியர் லீக் தொடருக்கான 12 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் போட்டிகளில் நடத்தப்படுவது போல கடந்த ஜூலை 8ம் தேதி ஏலம் நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுடன் தொடருக்கான கோப்பை, 12 அணிகளின் லோகோ மற்றும் ஜெர்சி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. குடியாத்தம் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் 19ம் தேதியில் இருந்து வார இறுதி நாட்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்