ஆசிய கோப்பைக்கான அணியில் கே.எல். ராகுல் இடம்பெறுவாரா..?

x

இந்திய அணி வீரர் கே.எல். ராகுலுக்கு, அவரும் 18 ஆம் தேதி உடற்தகுதி சோதனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட கே.எல். ராகுல், தற்போது மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார். இந்தநிலையில் கே.ராகுல் சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதாகவும், ஆகஸ்ட் 18 ஆம் தேதி அவருக்கு உடற் தகுதி சோதனை நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகே அவர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்