மீளவே முடியாத மரண அடி..இலங்கை செய்த சிறப்பான சம்பவம்.. | ICC Worldcup2023 | Cricket

x

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ரன்குவிப்புக்கு சாதகமான இந்த மைதானத்தில், தவறான ஷாட் தேர்வுகளால் இங்கிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ 30 ரன்களுக்கும் டேவிட் மலான் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ரூட், கேப்டன் ஜாஸ் பட்லர், லிவிங்ஸ்டன் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ஒருமுனையில் போராடிய பென் ஸ்டோக்ஸ், 43 ரன்களுக்கு கேட்ச் ஆனார். 34வது ஓவரில் 156 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர் குமாரா 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ் மற்றும் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து வீரர்களில் 6 பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்