`ட்விஸ்ட்னா இப்படி இருக்கணும்'... கடைசி பந்தில் ஜிம்பாப்வே படைத்த வரலாறு

x

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்றது. ஹராரேவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கடைசி பந்தில் கைவசம் 1 விக்கெட்டுடன் ஜிம்பாப்வேவிற்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முசரபானி 2 ரன்கள் அடித்து ஜிம்பாப்வேவை த்ரில் வெற்றி பெற வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்