தோனி விளையாடும் வகையில் ஐபிஎல் விதி மாற்றம்...சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்...

x

தோனி....

வெறும் பெயரல்ல.... கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வு....

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னையின் கடைசி போட்டியில் பெங்களூருவிற்கு எதிராக இமாலய சிக்சர் அடித்த தோனி, ஃபினிஷ் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டபோது, அதற்கு அடுத்த பந்தே எல்லைக் கோட்டருகே கேட்ச் ஆக, உடைந்துபோயினர் ரசிகர்கள்...

சென்னை ரசிகர்களுக்கு ரணத்தை தந்த இந்த நிகழ்வே, ஐபிஎல்லில் தோனியின் கடைசி தருணமாகப் பார்க்கப்பட்டது.

தோனி இன்னொரு முறை definitely not சொல்ல வேண்டும்.... அடுத்த ஐபிஎல் தொடரிலும் நிச்சயம் ஆட வேண்டும் என்பதே கோடானுகோடி ரசிகர்களின் ஒற்றைக் கோரிக்கையாக ஒலித்து வருகிறது.

ஆனால் அடுத்த ஐபிஎல்லில் பங்கேற்பேனா? இல்லையா? என்பது பற்றி மவுனம் காத்து வருகிறார் தோனி....

இத்தகைய சூழலில், ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள விதிமுறை மாற்றம், சிஎஸ்கே ரசிகர்களை விசிலடித்துக் கொண்டாட வைத்துள்ளது.

ஆம்.... UNCAPPED வீரர் விதியை மீண்டும் ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தோனியை தக்கவைப்பதற்காக இந்த விதியைக் கொண்டுவருமாறு சென்னை அணி கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக மீண்டும் UNCAPPED வீரர் விதியை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்களை, அறிமுக வீரர்களாக கருதும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி, குறைந்த தொகையில் UNCAPPED வீரர் ஆக தோனியை தக்கவைத்து சென்னை அணி விளையாட முடியும்....

விதி மாற்றத்தால் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், நீ பொட்டு வச்ச தங்கக் குடம் பாடலுடன் 43 வயதாகும் தோனியை களத்தில் தரிசிக்க பேராவலுடன் உள்ளனர் ரசிகர்கள்....

என்டிங் ப்ரீத் (நீ பொட்டு வச்ச தங்கக் குடம் பாடலுடன் )


Next Story

மேலும் செய்திகள்