விடைபெறும் தன் கடைசிநாளில் ராகுலுக்கு மறக்க முடியாத பரிசை கொடுத்த டீம் இந்தியா

x

விடைபெறும் தன் கடைசிநாளில் ராகுலுக்கு மறக்க முடியாத பரிசை கொடுத்த டீம் இந்தியா

இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், டி20 உலகக்கோப்பையுடன் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ளார். பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் பதவி காலம் நடந்து முடிந்துள்ள டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், பயிற்சியாளராக தனது கடைசி தொடரை ராகுல் டிராவிட் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்