“சீரற்ற ஆடுகளம்-வீரர்களுக்கு ஆபத்து“-“கிரௌண்டில் ஒளிந்துள்ள அபாயம்“ - கலங்கடிக்கும் INDvsPAK போட்டி?

x

கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

நியூயார்க், டல்லாஸ், ஃபுளோரிடா ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடைபெறும் நிலையில், நியூயார்க் மற்றும் டல்லாஸ் நகரங்களில் DROP IN பிட்ச்(PITCH) மூலம் மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நியூயார்க் மைதானம் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் முழுமையாக தயாரானது.

அவசர கதியில் உருவாக்கப்பட்ட நியூயார்க் மைதானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள டிராப்-இன் பிட்ச் இப்போது பிரச்சினையை கிளப்பியுள்ளது.

இந்தியா - அயர்லாந்து மோதிய போட்டி நியூயார்க்கில் நடைபெற்ற நிலையில், அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள டிராப்-இன் பிட்ச் தாறுமாறாக செயல்பட்டது.

ஆம்... பிட்ச்சின் சீரற்ற தன்மையால் இரு அணி பேட்டர்களும் தடுமாறினர். கணிக்க முடியாத பவுன்ஸ்கள் பேட்டர்களைப் பதம் பார்த்தன. உச்சக்கட்டமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் அடைந்து வெளியேறினார்.

இத்தகைய சூழலில் நியூயார்க் ஆடுகளத்தின் மீது கடுமையான அதிருப்தியை கிரிக்கெட் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இதுபோன்ற ஆடுகளங்கள் வீரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என இர்பான் பதானும் ஆன்டி ஃபிளவரும் எச்சரித்துள்ளனர். நியூயார்க் ஆடுகளம் சராசரிக்கும் குறைவான தரத்தில் இருப்பதாக மைக்கேல் வாஹன் விளாசியுள்ளார்.

சீரற்ற நியூயார்க் மைதானத்தின் அவுட் பீல்டும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.... வீரர்கள் காயம் அடையும் ஆபத்து, அதிகமுள்ளது.

பொதுவாக டிராப்-இன் பிட்ச்சுகள் வேறொரு இடத்தில் தயாரிக்கப்பட்டு மைதானத்தில் நிறுவப்படும்....

போதிய கிரிக்கெட் கட்டமைப்பு இல்லாத நியூயார்க்கில் நிறுவப்பட்டுள்ள டிராப்-இன் பிட்ச்சுகள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் தயாரிக்கப்பட்டவை... கடல் கடந்து பல்லாயிரம் மைல் பயணத்துக்குப் பின் கொண்டு வரப்பட்ட அவற்றின் தரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

கிரிக்கெட் ஆடுகளம் பேட்டர்களுக்கும் பவுலர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்... பவுலர்களை கலங்கடித்து பேட்டர்களுக்கு கைகொடுத்தாலும், பேட்டர்களை சோதித்து பவுலர்களுக்கு பலன் தந்தாலும் அது மோசமான ஆடுகளம்தான்....

சீரற்ற டிராப்-இன் பிட்ச்சுகளை அமெரிக்காவில் சோதித்துப் பார்க்க டி20 உலகக்கோப்பைதான் தொடர்தான் கிடைத்ததா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை இதே நியூயார்க் ஆடுகளத்தில் ஆடவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பேட்டர்கள் திண்டாடப்போவது உறுதி...


Next Story

மேலும் செய்திகள்